யாழில் 1000 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்
யாழ் மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்காக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் எட்டாம் திகதி சனிக்கிழமை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இத் தொழிற்சந்தையில் 40 ற்கு மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்த தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு   முகாமையாளர், கணக்காளர், பொலிஸ் உத்தியோகத்தர், தாதியர், நட்சத்திர விடுதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள், தையலாளர், சந்தைப்படுத்துநர், கணணி இயக்குநர், பாதுகாப்பு உத்தியோகத்தர், சுத்திகரிப்பாளர் போன்ற 1000 வரையிலான தொழில் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளவுள்ளன.

மேலதிக விளக்கங்கள் மற்றும் அறிவுருத்தல்களை மாவட்ட தொழில் நிலையத்தில் நேரடியாகவும் 021 221 9359 இலக்க தொலைபேசி ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.