நாளை முதல் அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக ஏப்ரல் விடுமுறையை முன்னதாக வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
இதன் படி முஸ்லிம் பாடசாலைகளும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி மீண்டும் 25 ஆம் திகதி றமழான் விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தலும் வருகிறது. இத்திட்டத்தில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக இது வரை கல்வி அமைச்சு அவதானம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கொரோனா தொற்று என்ற காரணத்தால் பாடசாலைகள் ஏப்ரல் 20 வரை மூடப்படுவதனால் முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் திறப்பது சாத்தியமற்றது என்றும் கல்வி அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.