Agrarian Research and Production Assistant - Department of Agrarian Development 



மநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சியற்ற - சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016 A) கீழ் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை- 2020

 பொதுவான தகைமைகள் :
  1. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
  2. நன்நடத்தை உடையவராகவும் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றுவதற்கு பொருத்தமானää உடல் மற்றும் உள ஆரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  3. வயதெல்லை: 18-30
  4. அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அலுவலக நடைமுறை விதியின் ஏ ஆம் அத்தியாயத்திற்கமைய அரசாங்க சேவைக்கு நியமிக்கப்படுவதற்கு பொருத்தமற்ற நபரல்லாது இருத்தல் வேண்டும்.
  5. அனைத்து விண்ணப்பதாரிகளும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினத்திற்கு முன்னதான 06 வருட காலத்திற்குள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தினுள் ஆகக் குறைந்தது 03 வருடங்களேனும் தொடர்ச்சியான நிரந்தரப் பதிவினைக் கொண்டிருக்க வேண்டியதுடன்இ அதனை உறுதிப்படுத்தல் தொடர்பாக கிராம அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்புப் பட்டியலின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.

 கல்வித் தகைமைகள் :

(அ) சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.

மற்றும்

(ஆ) கல்விப் பொதுத் தராதர பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.

எழுத்துப் போட்டிப் பரீட்சைக்குரிய பாட விதானம் :

  1. நுண்ணறிவுப் பரீட்சை- காலம் 01 மணித்தியாலம்
  2. கமத்தொழில் தொடர்பான பொதுவான அறிவு- காலம் 01 மணித்தியாலம்
(சித்தியடைதலின் பொருட்டு ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்த புள்ளிகளில் 40 … வீதம் பரீட்சார்த்திகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சம்பள அளவுத்திட்டம் (மாதாந்தம்).- பொது நிர்வாக சுற்றறிக்கை 3/2016 இல் MN-01 -2016-சம்பள தொகுதியின் கீழ் ரூபா 27,140.00 - 10x300-11x350-10x495-10x660- ரூபா 45,540.00 ஆகும்

பரீட்சைக் கட்டணம்.- ரூபா 600.00 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப்பரீட்சைகள்) கிளை
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
பெலவததை
பத்தரமுல்ல
‘Commissioner General of Examinations, 
Organization (Institutional and Foreign Examinations) Branch, 
Department of Examinations, 
Pelawatta, 
Battaramulla